திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை தாலுகா கோட்டநத்தம் கிராமத்தில் 40 குடும்பங்கள் வசிக்கும் ஏடி காலனி உள்ளது. பால்ராஜ் என்பவரும் அவரது மகன் ராஜகோபால் ஆகியோர் கிராமத்தில் பொது இடம் ஆன 12 சென்ட் இடத்தை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டுவதற்காக ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். கட்டடம் கட்டுவதற்காக தகர செட் அமைத்துள்ளனர். இதுகுறித்து கிராமத்தினர் குஜிலியம்பாறை போலீஸ் நிலையம் வட்டாட்சியர் அலுவலகம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தும் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனை அடுத்து கிராமத்தைச் சேர்ந்த அனைவரும் ஒன்றிணைந்து பொது இடம் ஊருக்கு தேவைப்படுவதால் அந்த இடத்தை ஒப்படைத்து விட வேண்டும் எனக் கூறி தகர செட்டை கிராம மக்களே அகற்றிக் கொண்டிருந்தனர். அப்பொழுது அங்கு வந்த ராஜகோபால் கீழே கிடந்த தடியை எடுத்து தகர செட்டை பிரித்தவர்களை தாக்கியுள்ளார். அதன் பிறகு கிராம மக்களும் தாக்கியுள்ளனர். இதில் இருதரப்பைச் சேர்ந்தவர்களுக்கும் ரத்த காயம் ஏற்பட்டது.