திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள தட்டாரப்பட்டி பிரிவில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட எரியோட்டை சேர்ந்த விஜயகுமார்(33) அவரது தம்பி சசிகுமார்(30)ஆகிய இருவரை வேடசந்தூர் துணை கண்காணிப்பாளர் இலக்கியா தனிப்படை போலீசார் கைது செய்து வேடசந்தூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து வேடசந்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.