வேடசந்தூர்: விவசாயி விஷ மாத்திரையை தின்று தற்கொலை

58பார்த்தது
வேடசந்தூர் ஆத்துமேடு பகுதியில் உள்ள டீக்கடையில் தாசரிபட்டியை சேர்ந்த விவசாயி சண்முகநாதன் (வயது 75) விஷ மாத்திரையை தின்றுவிட்டு அருகில் இருந்த இளைஞரிடம் செல்போனை வாங்கி தனது உறவினரிடம் என்னை மதிக்கவில்லை என்றும் என்னை கேவலப்படுத்துகிறார்கள் என்றும் இதனால் நான் விஷ மாத்திரையை தின்று விட்டேன் என்றும் கூறிக்கொண்டே மயங்கி விழுந்து உள்ளார். இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அவரை ஏற்றிக் கொண்டு வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் காக்கா தோப்பூர் பிரிவு செல்லும் முன்பாகவே சண்முகநாதன் உயிரிழந்தார். இதனையடுத்து அவரின் உடல் மீண்டும் வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டது. அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து குடும்பத்தினர் எந்த தகவலும் கூற மறுத்த நிலையில் வேடசந்தூர் போலீசார் இது குறித்து வழக்கு பதிந்து எதற்காக விஷ மாத்திரையை தின்று தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி