வேடசந்தூர்: அடிப்படை பிரச்சினைகளை தீர்க்கக்கோரி ஆர்ப்பாட்டம்

63பார்த்தது
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் விடுதலை வேடசந்தூர் ஒன்றியம் சார்பில் மக்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்க்கக் கோரி வேடசந்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஒன்றிய பொறுப்பாளர் சங்கிலி தலைமையில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் முத்துராமன் சத்தியமூர்த்தி சங்கிலி சுப்பிரமணி அசோகன் பழனிச்சாமி சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் முருகேசன் மாநில குழு சுப்புராமன் கோரிக்கை விளக்க உரையாற்றினர் மாநில குழு உறுப்பினர் ராமச்சந்திரன் சிறப்புரை ஆற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து கிராமப்புற ஏழைகளுக்கும் விலையில்லா வீட்டு மனை வழங்கிட கோரியும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைத்திட்டத்தை அனைத்து பகுதி மக்களுக்கும் தடையின்றி வழங்க நடவடிக்கை எடுக்க கோரியும் அரசு அறிவித்த ரூபாய் 319 கூலி முழுமையாக வழங்கிட கோரியும் வயதான தொழிலாளர்கள் ஆதரவற்ற பெண்கள் மாற்றுத்திறனாளிகளுக்கும் மாதம் ரூபாய் 5000 ஓய்வூதியம் வழங்கிட கோரியும், அரசு மதுபான கடையை இழுத்து மூடக்கோரியும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you