கிருஷ்ணகிரியில் இருந்து திண்டுக்கல் நோக்கி முந்திரி தோப்புக்கு வேலி அமைப்பதற்காக கல்தூண்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. லாரியை கிருஷ்ணகிரி சேர்ந்த செந்தில் வயது 40 என்பவர் ஓட்டி வந்தார். லாரி புதன்கிழமை காலை 6 மணி அளவில் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அடுத்த எவரடி மில் முன்பாக வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே உள்ள தடுப்புச் சுவரில் மோதி சிக்னல் கம்பத்தை உடைத்துக் கொண்டு கரூர் திண்டுக்கல் சாலையில் நடுரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. லாரியில் பயணம் செய்த டிரைவர் மற்றும் லோடுமேன்கள் இரண்டு பேர் காயம் இன்றி தப்பினர். தகவல் அறிந்த நெடுஞ்சாலை ரோந்து சிறப்பு சார்பு ஆய்வாளர் சதாம்உசேன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போக்குவரத்தை மாற்று பாதையில் திருப்பி விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.