திண்டுக்கல் வடமதுரை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த பெண்ணை கடந்த 2021ம் ஆண்டு ஆசைவார்த்தை கூறி அழைத்துச் சென்று கற்பழித்ததாக வேல்வார்கோட்டையைச் சேர்ந்த ஞானபிரகாஷ் என்பவரை வடமதுரை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் விரைவு மகளிர் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில் நீதிபதி, ஞானபிரகாசத்துக்கு ஒரு ஆண்டு சிறைத் தண்டனை, ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.