வேடசந்துார் அருகே விபத்தில் காயமடைந்த இளைஞர் 10 நாட்களுக்குப் பின் நேற்று இறந்தார். வேடசந்துார் நாடார் தெருவை சேர்ந்தவர் பிரகாஷ் 22. எரியோடு தனியார் நிதி நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்த அவர் முதல் நாள் பணி முடிந்த நிலையில் டூவீலரில் எரியோட்டில் இருந்து வேடசந்துார் நோக்கி வந்துள்ளார்.
எம். எல். ஏ. , அலுவலகத்தை கடந்து வந்த போது எதிரே வந்தமினி வேன் மோதியது. வேனை கன்னிவாடியை சேர்ந்த டிரைவர் பவித்ரன் 25, ஓட்டினார். காயமடைந்த பிரகாஷ் திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் 10 நாட்களுக்கு பின் நேற்று இறந்தார். வேடசந்துார் எஸ். ஐ. பாண்டியன் விசாரிக்ருகிறார்.