தமிழ்நாடு யோகா விளையாட்டு மேம்பாட்டு சங்கம், இந்திய யோகா கூட்டமைப்பு மற்றும் இந்திய விளையாட்டு ஆணையம் மற்றும் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் வழிகாட்டுதலின் கீழ் மாநில அளவிலான யோகா போட்டி பழனி ஸ்ரீ சண்முக சேவா சங்கர் மஹாலில் நடைபெற்றது.
இதில் 48 மற்றும் 33 வது தமிழ்நாடு யோகா விளையாட்டு சாம்பியன்ஷிப், யோகா தரவரிசை சாம்பியன்ஷிப், 42வது தமிழ்நாடு யோகா குழு தேர்வு நடந்தது. இந்த போட்டியில் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பங்கேற்றார்கள்.
இதில் வேடசந்தூர் ஒன்றியம் வெள்ளனம்பட்டி அக்ஷரா பப்ளிக் ஸ்கூல் (சி. பி. எஸ். இ). மாணவி ஆ. சீ. தன்யசிவாணி சீனிவாசன் மாநில அளவில் தகுதி தேர்வு பெற்றுள்ளார். இத்தேர்வினை தமிழ்நாடு யோகா விளையாட்டு மேம்பாட்டு சங்கம்தலைவர் மதன்குமார், செயலாளர் கரிகாலன், பொதுச் செயலாளர் மாரியப்பன் ஆகியோர்கள் தேர்வு செய்து வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை பாராட்டினர்.