திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றியம் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் அலிம்கோ நிறுவனம் இணைந்து நடத்தும் மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியோர் நலனுக்கான சிறப்பு முகாம் 7-7-2025 திங்கட்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அரசு மேல்நிலைப்பள்ளி குஜிலியம்பாறையில் நடைபெற உள்ளது.
மாற்றுத்திறனாளிக்கான உதவி உபகரணங்கள்
மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை
தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை
மாதாந்திர உதவித்தொகை மற்றும் பராமரிப்பு உதவித்தொகை
இலவச வீட்டு மனை பட்டா
கல்வி உதவித்தொகை
திருமண உதவித்தொகை
வங்கி கடன் மானியம்
இலவச பஸ் பாஸ்
அனைத்து திட்டங்களும் செயல்படுத்தப்பட உள்ளன எனவே குஜிலியம்பாறை ஒன்றியத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் மேற்குறிப்பிட்ட முகாமில் உரிய ஆவணங்களுடன் ஆதார் அட்டை குடும்ப அட்டை சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் 4 இவற்றுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.