தண்ணீர் தொட்டிகளுக்குள் பதுங்கிய பாம்பு

562பார்த்தது
தண்ணீர் தொட்டிகளுக்குள் பதுங்கிய பாம்பு
வேடசந்தூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் சித்தா மருத்துவ பிரிவு செயல்படுகிறது. இதன் பின்புறம் தண்ணீர் தொட்டி உள்ளது. நேற்று மருத்துவமனை ஊழியர் ஒருவர், அந்த தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்ய சென்றார்.

அப்போது அதற்குள் பாம்பு புகுந்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே இதுகுறித்து அவர் வேடசந்தூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் தீயணைப்பு நிலையை அலுவலர் ஜேம்ஸ் அருள் பிரகாஷ் தலைமையிலான தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து, தண்ணீர் தொட்டிக்குள் பதுங்கியிருந்த சுமார் 6 அடி நீள சாரை பாம்பை லாவகமாக பிடித்து வனப்பகுதியில் கொண்டுபோய் விட்டனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி