ஆபத்தான கிணற்றை சுற்றி சுவர் அமைக்க கோரிக்கை

1192பார்த்தது
ஆபத்தான கிணற்றை சுற்றி சுவர் அமைக்க கோரிக்கை
வத்தலக்குண்டு அருகே மல்லனம்பட்டியில் பள்ளி அருகிலுள்ள ஆபத்தான கிணற்றை சுற்றி கைப்பிடி சுவர் அமைக்க நடவடிக்ைக எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வத்தலக்குண்டு ஒன்றியத்திற்குட்பட்ட மல்லனம்பட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

இப்பள்ளி சுவரையொட்டி கைப்பிடி சுவர் இல்லாமல் பெரிய கிணறு ஒன்று உள்ளது. கிணற்றின் முக்கால் பகுதிக்கு மேல் தண்ணீர் உள்ளது. கிணற்றுக்கு மேல்புறம் பள்ளி உள்ளது. கீழ்புறம் ஊராட்சி மன்ற அலுவலகம் உள்ளது. மேற்கு புறத்தில் குடியிருப்பு வீடுகள் உள்ளன. கிழக்கு புறத்தில் ஊருக்குள் செல்லும் சாலை செல்கிறது.

இவ்வளவு முக்கியமான இடத்தில் அபாயகரமான கிணறு இருப்பதால் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், பள்ளி மாணவர்கள் அதிகம் சென்று வரும் இப்பகுதியிலுள்ள கிணறுக்கு உடனடியாக கைபிடி சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி