உடைப்பு ஏற்பட்டு நீர் வெளியேறிய பகுதியில் சீரமைப்பு பணி

71பார்த்தது
உடைப்பு ஏற்பட்டு நீர் வெளியேறிய பகுதியில் சீரமைப்பு பணி
வடமதுரை மோர்பட்டியில் இருந்து சித்துவார்பட்டி செல்லும் ரோட்டோரம் மலைக்கோட்டை பகுதியில் குடிநீர் வாரியம், ஊராட்சி நிர்வாகத்தின் குழாய் பாதைகள் பதிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள குளத்தில் மண் எடுக்க சென்ற கனரக வாகனங்களால் இப்பகுதி ரோடு பிரிவின் கீழ் இருந்த இரு குழாய் பாதைகளும் உடைந்து பெருமளவில் நீர் வெளியேறி வீணானது. கசிவு நீர் ரோட்டில் தேங்கியதால் ரோடும் பாதிப்படைந்தது. மண் அள்ளும் இயந்திரத்துடன் அங்கு சென்ற குடிநீர் வாரியத்தினர் குழாய் பாதையில் உள்ள இரு உடைப்புகளை சீரமைத்தனர்.
Job Suitcase

Jobs near you