பிலாத்து: தாயை துன்புறுத்திய மகன் மீது போலீசில் புகார்

79பார்த்தது
திண்டுக்கல் தென்னம்பட்டி அருகே உள்ளது பிலாத்து கிராமம். கமர் நிஷாவின் மகன் அலாவுதீன் என்பவர் தஸ்பியா என்ற பெண்ணுடன் திருமணம் செய்யாமலே குடும்பம் நடத்தி வந்தார். தானும் தான் சேர்த்த பெண்ணும் தனது தாயாரை கவனித்துக் கொள்வதாக வீட்டில் நுழைந்தவர்கள். வீட்டிற்குள் நுழைந்த பகுதியில் நன்றாக கவனித்து, சில நாட்களுக்குப் பின்னர் மூதாட்டியை துன்புறுத்தி சொத்தை அபகரிக்க திட்டமிட்டதாக தெரிகிறது.

இதனை கேள்விப்பட்டு சென்னையில் குடியிருந்து வரும் மூதாட்டியின் மகள் ஜம்ரத் நிஷா தனது தாயாரிடம் பேசுவதற்கு செல்போனில் தொடர்பு கொண்ட பொழுது மூதாட்டியிடம் பேசவிடவில்லை என்றும் தான் நேரில் வந்து தனது தாயாரை வீட்டில் இருந்து பார்த்து கொள்வதாக கூறியும் அதனை அலாவுதீன் மறுத்ததாக தெரிகிறது. இந்நிலையில் தனது இன்னொரு மகள் குடியிருக்கும் வீட்டில் அழைத்து சென்று கவனித்து வருகின்றனர்.

தனது தாயாரை கவனிக்காதது குறித்து கேட்டதற்கு தன்னையும் அடித்து , கடித்து துன்புறுத்தியதாகவும், அதனால் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அது குறித்து வடமதுரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவும் ஜம்ரத் நிஷா தெரிவித்தார். புகார் அளித்தும் போலீசார் ஒரு தலைப்பட்சத்துடன் நடந்து கொள்வதோடு விசாரணை நடத்த முன் வரவில்லை என குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் தனது தாயாரை கொடுமைப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி