மத்தியில் ஆளும் பாஜக அரசின் மக்கள் விரோதப் போக்குகளை தோலுரித்துக்காட்டும் வகையில் ஒவ்வொரு குக்கிராமங்களிற்கும் சென்று நாட்டை சூழவிருக்கும் அபாயத்தினை விளக்கி அதை போக்கும் பொருட்டு செல்வி ஜோதிமணி கைச்சின்னத்திற்கு வாக்குகள் கேட்டது மக்களிடையை பலத்த வரவேற்பினை பெற்றது. அய்யலூர் மேம்பாலத்தின் இருபுறங்களிலும் இந்திய கூட்டணியின் கரூர் பாராளுமன்ற வேட்பாளர் ஜோதிமணியை எதிர்பார்த்து மக்கள் கூட்டம் அலைமோதத் தொடங்கியது.
கடும் வெயிலையும் பொருட்படுத்தாது நாலா திசைகளிலிருந்தும் மக்கள் சாரை சாரையாக வந்து குவிந்தபடியிருந்தனர். வெயிலின் கொடுமையிலிருந்து மக்கள் தங்களை ஆசுவாசப்படுத்திக்கொள்ள அய்யலூர் பேரூர் திமுக சார்பில் பெரியதொரு நிழல் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது.
வேட்பாளர் வரும்வரை மக்களை உற்சாகப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் கரகாட்டம், தப்பாட்டம் எல்லாம் ஏற்பாடு செய்து அசத்தியிருந்தனர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்.
வெயிலின் கொடுமையிலிருந்து மக்கள் தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்ள வெள்ளரி பிஞ்சு, குல்பி ஜஸ், ஐஸ் கிரீம் வழங்கப்பட்டது. சரியாக 1. 20 க்கு அய்யலூர் மேம்பாலம் அருகே வேட்பாளர் ஜோதிமணி வந்தடைந்தார். எளிமையாகவும் இயல்பாக பேசி ஓட்டு கேட்டார்.