திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் தாலுகா உட்பட்ட தாடிக்கொம்பு அருள்மிகு சௌந்தரராஜ பெருமாள் கோவிலில் இன்று இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோசாலை அமைக்க அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் மற்றும் கோவில் அறங்காவலர் குழு தலைவர்கள், உறுப்பினர்கள், பக்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.