திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் கரூர் சாலையில் அன்பு என்பவர் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடையில் மின் கசிவின் காரணமாக தீ விபத்து இன்று ஏற்பட்டது. இந்த விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்தது. மேலும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.