திண்டுக்கல் ஒரிஜினல் வாசவி ஜூவல்லரி மார்ட் நகைக்கடை உரிமையாளர்கள், தினேஷ் மற்றும் தீரஜ் ஆகியோரின் வீடு மற்றும் திண்டுக்கல், ஒட்டன்சத்திரத்தில் உள்ள நகைகடைகள் என 5 இடங்களில், 2-வது நாளாக இன்று (ஜனவரி 4) மாலை வரை வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். எடை போடும் மெஷின் கொண்டு, வருமான வரித்துறையினர் சோதனை செய்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.