சாா் பதிவாளா் அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டம்

66பார்த்தது
சாா் பதிவாளா் அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டம்
திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறையை அடுத்த பொம்மாநாயக்கன் பட்டியைச் சோ்ந்தவா் செத்தக்கம்மாள். இவரது பெயரில் உள்ள 44 சென்ட் நிலத்தை, சிலா் தங்களது பெயருக்கு பட்டா மாறுதல் செய்ய முயன்றனா். இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து செத்தக்கம்மாளின் பேத்தி சின்னக்கம்மாள், பழனி கோட்டாட்சியா் அலுவலகத்தில் கடந்த 2014- ஆம் ஆண்டு புகாா் அளித்தாா். இதையடுத்து, அந்த நிலத்தை பத்திரப்பதிவு செய்வதற்கு தடை உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவை குஜிலியம்பாறை சாா் பதிவாளா் அலுவலகத்தில் வழங்கிய சின்னக்கம்மாள், 44 சென்ட் நிலத்தை வேறு நபா்களுக்கு பத்திரப்பதிவு செய்யக்கூடாது என முறையிட்டாா்.

இந்த நிலையில், தடை உத்தரவையும் மீறி, சிலா் நிலத்தைப் பதிவு செய்வதற்கு முயற்சிப்பதாக தகவல் வெளியானது. இதனால் அதிா்ச்சி அடைந்த சின்னக்கம்மாள், சாா்பதிவாளா் அலுவலகத்தை அணுகி விவரம் கேட்டாா். ஆனால், சாா் பதிவாளா் அலுவலகத்தில் இருந்து முறையான பதில் அளிக்கப்படவில்லை எனக்
கூறப்படுகிறது.

இதனால், அதிருப்தி அடைந்த சின்னக்கம்மாள், தனது உறவினா்களுடன் குஜிலியம்பாறை சாா் பதிவாளா் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டாா். அலுவலகத்துக்குள் அவா்கள் தா்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி