பத்ரகாளி அம்மன் கோயில் சிறப்பு பூஜை

474பார்த்தது
பத்ரகாளி அம்மன் கோயில் சிறப்பு பூஜை
திண்டுக்கல் மலைக்கோட்டை பத்திரகாளி அம்மன் கோவில் சிறப்பு பூஜை நடந்தது. திண்டுக்கல் மலைக்கோட்டை அடிவாரத்தில் அமைந்துள்ள அருள்மிகு பத்ரகாளியம்மன் திருக்கோவிலில் இன்று வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

அம்மனுக்கு தேன், மலர், சந்தனம் உட்பட பதினாறு வகை பொருட்களைக் கொண்டு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டன. தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து இங்கு சாமி தரிசனம் செய்து விட்டு செல்வார்கள். செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு பூஜை நடப்பது வழக்கம். பக்தர்கள் பங்கேற்கும் பஜனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முன்னதாக பக்தர்களின் விளக்கு பூஜை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி