வேடசந்துார் ஆத்து மேட்டில், மாலை நேரங்களில் போக்குவரத்து ஸ்தம்பிப்பதால் இங்குள்ள சிக்னலை பயன்பாட்டிற்கு கொண்டு வர போலீசார் முன் வர வேண்டும். வேடசந்துார் தாலுகா , சட்டசபை தொகுதியின் தலைநகராக உள்ள வேடசந்துார் நகர் பகுதியை குடகனாறு இரண்டாகப் பிரிக்கிறது. திண்டுக்கல், கரூர், ஒட்டன்சத்திரம் நகர் பகுதிகளுக்கு மெயின் ரோடு பிரிந்து செல்கிறது. ஆத்து மேட்டில் நான்கு வழித்தடங்களும் சந்திப்பதால் இங்கு போக்குவரத்து நிறைந்து காணப்படுகிறது. வாகன போக்குவரத்தும் கூடுதலாக உள்ளதால் வாகனங்களை முறையாக நின்று செல்லும் வகையில் சிக்னல் அமைக்கப்பட்டது. இதில் ஒட்டன்சத்திரம் ரோட்டில் உள்ள சிக்னலை அடையாளம் தெரியாத வாகனம் சேதப்படுத்தி சென்ற நிலையில் சிக்னலின் செயல்பாடு தற்போது முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் இங்கு போக்குவரத்து நெருக்கடி தொடர்கிறது. இதோடு விபத்துகளும் தொடர்கதையாக உள்ளது. வளர்ந்து வரும் நகர் பகுதியில் போக்குவரத்து சிக்னலை முறைப்படுத்தி அதை செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும். பஸ் ஸ்டாண்ட் பகுதியில் காலை , மாலை பள்ளி நேரங்களில் போக்குவரத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.