திண்டுக்கல் அருகே செட்டிநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த கணேசன் வயது 54 இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு தனது மனைவியை கொலை செய்த வழக்கில் தாடிக்கொம்பு காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர் பின்னர் ஜாமீனில் வெளியே வந்த கணேசன் நீதிமன்ற விசாரணைக்கு கடந்த 4 வருடங்களாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார்.
இதனால் திண்டுக்கல் நீதிமன்றம் அவருக்கு பிடியாணை பிறப்பித்தது.
இதைத் தொடர்ந்து புறநகர் டிஎஸ்பி சிபி சாய் சௌந்தர்யன் தலைமையில் தாடிக்கொம்பு சார்பு ஆய்வாளர் பிரபாகரன், மற்றும் DSP. தனிப்படையினர் ஆகியோர் தீவிர விசாரணை மேற்கொண்டு மதுரையில் தலைமறைவாக பதுங்கியிருந்த கணேசனை கைது செய்து நீதிமன்ற விசாரணைக்கு ஆஜர்படுத்தி பிடியாணையை நிறைவேற்றினர்