பழனியில் அணையிலிருந்து நீர் திறப்பு
திண்டுக்கல் மாவட்டம் பழனி பாலாறு பொருந்தலாறு, குதிரையாறு என இரண்டு அணைகளிலிருந்து இன்று முதல் 120 நாட்களுக்கு தண்ணீரை பழனி சார் ஆட்சியர் கிசன் குமார் ஐ.ஏ.எஸ் திறந்து வைத்தார். இந்த தண்ணீர் திறப்பு மூலம், 7012 ஏக்கர் பழைய பாசன நிலங்கள், பழனி வட்டத்தில் உள்ள புதச்சூர், பாலசமுத்திரம் கிராமங்களிலும் பாசனம் பெறும். இதனால் விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.