பழனியில் 15 நபர்கள் மீது வழக்கு பதிவு
திண்டுக்கல் மாவட்டம், பழனி பழைய தாராபுரம் ரோடு, கோண வாய்க்கால் அருகே சட்டத்திற்கு புறம்பாகவும், மக்களுக்கு இடையூறாக குதிரை பந்தயம் நடத்தியதாக, தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் தென்னரசு உத்தரவுப்படி, நெடுஞ்சாலைத்துறை ரோந்து காவல்துறையினர் 15 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.