அறுபடை வீடு மூன்றாம் படைவீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு சிங்கப்பூர் நாட்டின் வெளியுறவுத்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் ஆன காசிவிஸ்வநாத சண்முகம் சாமி தரிசனம் செய்வதற்காக தனி ஹெலிகாப்டர் மூலம் பழனியில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் வந்து இறங்கினார். அவருக்கு போலீசார் சார்பில் அரசு மரியாதை செய்து வரவேற்றனர். அதனை தொடர்ந்து அங்கிருந்த போலீசார் மற்றும் பத்திரிக்கையாளுடன் குழுவாக புகைப்படம் எடுத்துக்கொண்டார். பின்னர் ரோப் கார் வழியாக மலைக்கோவிலுக்கு சென்ற அவருக்கு உச்சிக்கால பூஜைக்கு சிங்கப்பூர் அமைச்சர் காசி விஸ்வநாத சண்முகம் அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டு உச்சிக்கால பூஜையில் தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து உச்சி கால பூஜை முடிந்தவுடன் கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது அதனை தொடர்ந்து ரோப் கார் வழியாக கீழே இறங்கிய அவர் மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு சென்றார்.