திண்டுக்கல் மாவட்டம்
பழனி மலைக்கோயிலில் எம். பி திருமாவளவன் இன்று சாமி தரிசனம் செய்யவந்தார். அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆட்சி அதிகாரம் என்பது மக்கள் தரும் தீர்ப்பு. நாம் அதை நோக்கி பயணப்படுகிறோம், போராடுகிறோம். பழனி மலைக் கோயிலுக்கு தேர்தலில் அதிக சீட் வேண்டும் என்பதற்காகவோ, பணம் காசு வேண்டும் என்பதற்காகவோ வரவில்லை. என் முன்னோர்கள் வாழ்ந்த இடம் என்பதனால் அதனை காண்பதற்காகவே வந்துள்ளேன் என்றார்.