கொடைக்கானலுக்கு இன்று வாரவிடுமுறை என்பதால் கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். இதனால் வெள்ளி நீர்வீழ்ச்சி, மோயர்பாயிண்ட், குணாகுகை, பைன் பாரஸ்ட், தூண்பாறை, பிரையண்ட் பார்க், செட்டியார் பார்க், ரோஜா பார்க் உள்ளிட்ட இடங்களில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. மேலும் நகர மையப்பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியில் உற்சாகமாக படகுசவாரி செய்து மகிழ்ந்தனர்.