பழனி: வார சந்தையில் கழிவறை வசதி இல்லை; பொதுமக்கள் அவதி

85பார்த்தது
பழனி அருகே ஆயக்குடி பேரூராட்சியில் பதினெட்டு வார்டுகள் உள்ளன. ஆயக்குடி என்றாலே கொய்யா, மா, சப்போட்டா உள்ளிட்ட விவசாய பொருட்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு கொய்யாப்பழத்திற்கென்று தனி சந்தையும் உள்ள ஊர் ஆயக்குடி ஆகும். இங்கு வார சந்தை செயல்படுகிறது. 

ஆயக்குடியை சுற்றியுள்ள ஆயக்குடி, கணக்கன்பட்டி, ராமபட்டினம், புதூர், கோம்பைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விளைவிக்கப்படும் விவசாய பொருட்கள் அனைத்தும் இந்த வார சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. இங்கு திங்கட்கிழமை தோறும் விற்பனை செய்யப்படும் வார சந்தையில் விலை பொருட்களை வாங்க ஏராளமான பொதுமக்கள் வருகை தருகின்றனர். 

மலைக்காலங்களில் சேரும் சகதியமாக உள்ளதால் தற்போது பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. ஆனாலும் இங்கு வரும் பொதுமக்களுக்கும், வியாபாரிகளுக்கும் கழிவறை வசதி இருந்தும் செயல்பாட்டில் இல்லாமல் கம்பி வேலி போட்டு அடைக்கப்பட்டு இருக்கிறது. இதனால் சந்தைக்கு வரும் பொதுமக்களும் வியாபாரிகளும் கடும் அவதி அடைந்து வருகின்றனர். 

மற்ற நாட்களில் காலியாக உள்ள இந்த வார சந்தையையே பொதுமக்கள் கழிவறையாக பயன்படுத்துவதாகவும், உடனடியாக ஆயக்குடி வார சந்தையில் உள்ள பொதுமக்களுக்காக அமைக்கப்பட்ட பொதுக் கழிவறையை பேரூராட்சி நிர்வாகம் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி