பழனி ரோப்கார் பெட்டிகளில் கற்கள் வைத்து சோதனை ஓட்டம்

58பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். திருவிழா மற்றும் விஷேச காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிகின்றனர். பக்தர்களின் எளிதாக மலைக் கோயிலுக்கு சென்று வர ரோப் கார் மற்றும் மின் மின் இழுவை ரயில் உள்ளது. ரோப் கார் மூலம் ஒரு மணி நேரத்திற்கு சுமார் 500 பேர் இயற்கை காட்சிகளை ரசித்தபடி மலைக் கோயிலுக்கு பயணிக்கலாம் , ரோப் கார் சேவை தினமும் பராமரிப்பு பணிக்காக ஒரு மணி நேரமும் , மாதத்திற்கு ஒரு நாட்களும் வருடத்திற்கு 40 நாட்களுக்கு பராமரிப்புக்கு நிறுத்தி பராமரிப்பு மேற்கொண்டு வருகின்றது. ரோப் கார் கடந்த அக்டோபர் 7ஆம் தேதி பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்பட்டது.
இதில் ரூபாய் ஆறு லட்சம் மதிப்பிலான இரும்பு கயிறு பொருத்தபட்டுள்ளது.
மற்றும் மேல்தளத்தில் 2 லட்சம் மதிப்புள்ள ஷாப்ட் இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் ரோப் காரில் பெட்டிகளை பொருத்தி சோதனை ஓட்டம் துவங்கி உள்ள நிலையில் எடை கற்களை அடுக்கி சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது.
பின்னர் ஐஐடி வல்லுநர் குழு நேரடியாக ஆய்வு செய்து வல்லுநர் குழு சான்றிதழ் வழங்கிய பின் ரோப்கார் மீண்டும் பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என கோயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி