பழனி நகரில் கடந்த இரண்டு தினங்களாக கடுமையான வெயில் மக்களை வாட்டி வதைத்தது. இந்த நிலையில் திடீரென மழை பெய்ய துவங்கியது. அரை மணி நேரம் பெய்த மழையால் பேருந்து நிலையம், காந்தி மார்க்கெட், ரயில் நிலைய சாலையில் தண்ணீர் தேங்கியது. பொதுமக்கள் பலரும் மழையில் நனைந்தபடியே சாலையில் சென்றனர். மழை காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசத் துவங்கியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.