திண்டுக்கல் மாவட்டம் பழனி நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு இலவச பாடப் புத்தகங்கள் மற்றும் சீருடைகள் புத்தகப்பைகள் போன்றவற்றை, பழனி நகரமன்றத் தலைவர் உமாமகேஸ்வரி வழங்கினார். இந்நிகழ்வில் நகரமன்றத் துணைத் தலைவர் கந்தசாமி மற்றும் முன்னாள் மாணவர் முருகானந்தம், நகரமன்ற உறுப்பினர் பத்மினி முருகானந்தம், முன்னாள் மாணவரும் முன்னாள் மாவட்ட உதவித் திட்டமிடல் அலுவலருமான ஹரிஹரசுவாமிநாதன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இவ்விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் சுதா மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.