ரோப் கார் சேவை நிறுத்தம்

82பார்த்தது
ரோப் கார் சேவை நிறுத்தம்
உலக புகழ் பெற்ற பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் எளிதாக சென்று வர ரோப் கார் சேவை பயன்பாட்டில் உள்ளது. இயற்கை எழிலை கண்டு ரசித்து, விரைவாக பழனி முருகனை வழிபட பக்தர்கள் உலகம் முழுவதிலிருந்தும் இதற்காகவே வருவதுண்டு.

பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அவ்வப்போது மாதாந்திர மற்றும் வருடாந்திர தொழில்நுட்ப பராமரிப்புகள் மேற்கொள்ளப்படும். அந்த வகையில் நாளை ஜூலை 2 ஆம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக ரோப் கார் சேவை நிறுத்தப்படுகிறது என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி