திண்டுக்கல்: ஆக்கிரமிப்பு அகற்ற எதிர்ப்பு; சாலை மறியல்

82பார்த்தது
திண்டுக்கல்: ஆக்கிரமிப்பு அகற்ற எதிர்ப்பு; சாலை மறியல்
திண்டுக்கல் மாவட்டம் பழனி கிரிவீதியில் சாலையோர கடைகள் செயல்பட மதுரை ஐகோர்ட்டு தடை விதித்தது. அதையடுத்து அங்குள்ள கடைக்காரர்கள் இட்டேரி சாலை, கொடைக்கானல் சாலை பகுதிகளில் தற்காலிக கடை வைத்துள்ளனர். எனினும் போலீஸ், வருவாய், நெடுஞ்சாலைத்துறை சார்பில் அவ்வப்போது சாலையோர ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்து வருகிறது. 

அதன்படி போலீஸ் மற்றும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் அடிவாரம் கொடைக்கானல் சாலை பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற்றது. முன்னதாக கடைக்காரர்கள் பலர் தாங்களாகவே முன்வந்து கடைகளை அகற்றிக் கொண்டனர். இதற்கிடையே வியாபாரிகள் சிலர், ஆக்கிரமிப்பு அகற்றத்தால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி, கொடைக்கானல் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். 

போலீசார் மற்றும் அதிகாரிகள் போராட்டம் நடத்திய வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, போக்குவரத்துக்கு இடையூறாக ஆக்கிரமிப்பு கடை அமைக்க கூடாது என அறிவுறுத்தினர். அதையடுத்து வியாபாரிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியலால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி