பழனி முருகன் கோவிலில் ராஜகோபுரத்தை சீரமைப்பதற்கான பணிகள்

62பார்த்தது
பழனி முருகன் கோவிலில் ராஜகோபுரத்தை சீரமைப்பதற்கான பணிகள்
பழனி முருகன் கோவில் உலக பிரசித்தி பெற்றது. இங்கு வெளியூர், வெளிமாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர். தரிசனம் முடிந்து பிறகு கோவில்ராஜ கோபுரத்தை வழிபடுவது வழக்கம். கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவில் ராஜகோபுரத்தின் உச்சி பகுதி சிறிய சேதம் அடைந்தது. எனவே கோவிலில் உரிய பூஜைகள் செய்து, கோபுரத்தில் உள்ள சேதமடைந்த பகுதியை சீரமைக்கவேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கைவிடுத்தனர். அதையடுத்து பழனி கோவில் நிர்வாகம் சார்பில் கோவில் ராஜகோபுரத்தை சீரமைக்க முடிவு செய்தனர். அதன்படி தற்போது ராஜகோபுரத்தை சீரமைப்பதற்கான பணிகள் தொடங்கி உள்ளன. அதாவது கோபுர பகுதியில் பணிகள் மேற்கொள்வதற்காக அங்கு கம்புகள் கொண்டுசாரம், படிகள் அமைக்கப்பட்டு உள்ளது. விரைவில் பாலாலய பூஜை, சிறப்பு பூஜைகள் செய்து சீரமைப்பு பணிகள் தொடங்கப்படும் என்று கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி