திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவில் மலை அடிவாரம், கிரிவலப் பாதை பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகளால் பக்தர்கள் பாதிக்கப்படுவதாக கூறி திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் தொடர்ந்து வழக்கில் நீதிமன்றம் கிரிவலப் பாதையில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றவும் , எந்த விதமான வாகனங்களையும் அனுமதிக்க கூடாது என உத்தரவின் படி சாலையோர கடைகள் அகற்றப்பட்ட நிலையில் தற்போது ஐயப்ப பக்தர்கள் சீசனையோட்டி தங்களது வாழ்வாதாரம் இல்லாமல் தவிப்பதாகவும் கூறி சாலையோர வியாபாரிகள் 50 க்கும் மேற்பட்டோர் பழனி திருக்கோவில் அலுவலகத்தை முற்றுகையிட வந்தனர். அப்போது போலிசார் சாலையோர வியாபாரிகளை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.