திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பழனி ஆண்டவர் ஆண்கள் கல்லூரியில் இன்று பிளாஸ்டிக் விழிப்புணர்வு கிரிக்கெட் போட்டி நிகழ்ச்சி நடைபெற்றது. வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, நகராட்சி மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்டனர். கல்லூரி மைதானத்தில் கிரிக்கெட் விளையாடி பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தடுப்பது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.