பழனி டிஎஸ்பி தனஜெயமிடம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மேலாண்மைக்குழு சார்பில் மனு அளித்தனர். அந்த மனுவில்: - பழனி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 1600 மாணவிகள் பயின்று வருகின்றனர்.
மாணவிகளின் பாதுகாப்பு நலன் கருதி காலையிலும் மாலையிலும் அந்தப் பகுதியில் போலீசார் பாதுகாப்பு வழங்குமாறு அந்தப் பள்ளியின் மேலாண்மைக்குழு நிர்வாகிகள் டிஎஸ்பி தனஜெயமிடம் மனுவை வழங்கி பாதுகாப்பு கேட்டனர்.
மேலும் கடந்த வருடம் தொடர்ந்து அந்தப் பகுதியில் போலீசார் பாதுகாப்பு வழங்கியதைப் போன்று இந்த ஆண்டும் வழங்க வேண்டும் எனக் கூறி நிர்வாகிகள் டிஎஸ்பி மற்றும் காவல் துறையினருக்கு மேலாண்மைக்குழு நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் நன்றியை தெரிவித்தனர்.