திண்டுக்கல் மாவட்டம் நெய்க்காரப்பட்டி பகு தியில் தனியார் அசைவ ஓட்டல் உள்ளது. இங்கு நவ. , 18ல் வேலாயுதம் பாளையம் புதுாரை சேர்ந்த 'செல்லமுத்து 21, நண்பர்கள் தவமணிபிரகாஷ் 29, ஸ்ரீராம் 28, செல்லத்துரை 28, வசந்த் 19, கிரில் சிக் கன் வாங்கி சாப்பிட்டனர். வீட்டிற்கு சென்ற சில மணி நேரத்தில் 5 பேரின் உடல்நிலை பாதிக்கப் பட்டு வயிற்றுப்போக்கு, வாந்தி, மயக்கம் ஏற்பட் டது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற் றனர்.
உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிய தொப்பம்பட்டி வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் ஜஸ்டின் அமுல்ராஜ் தலைமையிலான அலுவலர்கள் ஓட்டலில் ஆய்வு செய்து உணவு மாதிரிகளை சேகரித்து சோதனைக்கு அனுப்பி னர். ஓட்டலுக்கும் எச்சரிக்கை நோட்டீஸ் கொடுக்கப் பட்டது.