திண்டுக்கல் மாவட்டம்
பழனி அடிவாரம் மீனாட்சியம்மன் கோயிலில் பாலாலயம் நடைபெற்றது. முன்னதாக, கால பூஜைகள் யாகத்துடன் தொடங்கியது. இரண்டாம் கால பூஜை நடத்தப்பட்டு, தீபாராதனை முடிவில் கலசங்கள் கோயிலை வலம் வந்து கோயில் கருவறையில் அபிஷேகம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து ஸ்தபதிகள் கோயில் கோபுரங்களில் வேலைகளைத் தொடங்கினர்.