பழனி: மஞ்சள் பை விழிப்புணர்வு நிகழ்ச்சி

69பார்த்தது
பழனி: மஞ்சள் பை விழிப்புணர்வு நிகழ்ச்சி
திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் பழனி அரிமா சங்கம் வைரவிழாவை முன்னிட்டு வருவாய்த் தீர்வாய நிகழ்ச்சிக்கு வந்த பொதுமக்களுக்கு மஞ்சள் பை, கண்தானம் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வை பழனி துணை ஆட்சியர் சுகுமார், வட்டாட்சியர் பிரசன்னா ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் அரிமா சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி