திண்டுக்கல் மாவட்டம் பழனி மதனபுரத்தைச் சேர்ந்த பசீர் அகமது மனைவி பஷீரா பேகம் 45. அடிவாரம் தேவர் சிலை அருகே சன்னதி வீதியில் துணிக்கடை வைத்திருந்தார். மதனபுரத்தைச் சேர்ந்த சவரத்தொழிலாளி மாரியப்பன் 50, டிச. 25 அன்று காலை பஷீரா பேகத்தின் துணிக்கடைக்குச் சென்று கையில் வைத்திருந்த கத்தியால் பஷீரா பேகத்தின் கழுத்தை அறுத்து கொலை செய்தார். அதன் பின் தற்கொலை செய்ய முயற்சி செய்து தன் கழுத்தை மாரியப்பன் அறுத்துக் கொண்டார். பழனி அடிவாரம் போலீசார் அவரை கைது செய்தனர்.