திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர மக்களின் குடிநீர் ஆதாரமாக உள்ள கோடைகால நீர்த்தேக்கத்தில் இருந்து ரூ. 18.58 கோடி மதிப்பில் புதிய குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்திற்கு கிரிவலப்பாதையில் 800 மீட்டர் தூரத்திற்கு குழாய் பதிக்க கோயில் நிர்வாகம் அனுமதி மறுத்ததால் பணி நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது குழாய் பதிக்க கோயில் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.