திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே ஆயக்குடி பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு கிடைத்த தகவல் அடிப்படையில் பழனியை சேர்ந்த மணிகண்டன் (58) , ஆயக்குடியை சேர்ந்த நாச்சிமுத்து (48), கார்த்திக்( 40), திண்டுக்கல்லை சேர்ந்த சிவக்குமார் (40) உள்ளிட்ட நான்கு பேரும் கேரளா மற்றும் மற்றும் வெளி மாநில லாட்டரி சீட்டுகளான தங்கம், குயில், சிங்கம் மற்றும் வட மாநில பெயர்கள் கொண்ட லாட்டரி சீட்டுகளை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு விற்பனை செய்து வந்தது தெரியவந்த நிலையில் இவர்களிடம் லாட்டரி சீட்டு வாங்குவது போல போலீசார் தொடர்பு கொண்டு பேசி நேரில் வரவைத்து பிடித்தனர். இவர்களிடமிருந்து 994 லாட்டரி சீட்டுகளும் , சுமார் ஒரு லட்சம் மதிப்பிலான லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தும் , நான்கு பேரை மீதும் வழக்கு பதிவு செய்தும் சிறையில் அடைத்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.