திண்டுக்கல்: பழனி, இடும்பன்மலை அருகே சுற்றுலா பஸ்நிலையத்தில் குப்பைக் கிடங்கு உள்ளது. இங்கு கோயில் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இங்கு குவிந்து கிடக்கும் குப்பைகளில் மதியம் மர்ம நபர்கள் தீ வைத்துச் சென்றனர். அப்போது காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ மளமளவென பரவி குப்பைகள் கொளுந்துவிட்டு எரிந்தன.