திண்டுக்கல் மாவட்டம்
பழனி தாலுகா ஆண்டிபட்டி வனப்பகுதி அருகே உள்ள தோட்டத்தில் இன்று ஒற்றை காட்டு யானை புகுந்தது. விவசாயி ஹரி என்பவரின் தோட்டத்தில் காட்டு யானை புகுந்து, மரங்களை உடைத்து சேதப்படுத்தி வருகிறது. இந்த காட்டு யானை விவசாய தோட்டத்தில் புகுந்ததால் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர். இந்நிலையில் வனத்துறையினர் யானை நடமாட்டத்தை கண்காணித்து, வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.