பழனி அருகே உள்ள ராமநாதன்நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 72). விவசாயி. இவர், தனது சைக்கிளில் பழனி பைபாஸ் சாலையில் மின்மயானம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது எம். சாண்ட் மண் ஏற்றிக் கொண்டு பின்னால் வந்த டிப்பர் லாரி, சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சுப்பிரமணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த அடிவாரம் போலீசார் விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.