தொடர்ந்து மேற்கு தொடர்ச்சி மலையடிவாரம் பகுதிகளில் உள்ள பகுதிகளில் சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் காரணமாக பழனி பாலாறு பொறுந்தாலாறு அணையில் மொத்த கொள்ளளவான 65 அடியில் 38 அடி தண்ணீர் இருப்பு உள்ளது. இதன் காரணமாக பழனி அருகே பாலாறு பொறுந்தலாறு இருந்து தாடாகுளம் கால்வாய் இரண்டாம் போக பாசனத்திற்கு இன்று முதல் 120 நாட்களுக்கு 15. 52 அடி தண்ணீர் வினாடிக்கு 15 கன அடி வீதம் 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இன்று காலை தாசில்தார் சக்தி வேலன் , செயற்பொறியாளர் பாலமுருகன் , உதவி செயற்பொறியாளர் உதயகுமார் , விவசாயிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பு பூஜைகள் செய்யபட்டு தண்ணீர் திறக்கபட்டது. இதன் மூலம் பழனி வட்டத்தில் புதச்சு மற்றும் பால சமுத்திரம் கிராமத்தில் 501 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.