திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர்.
இந்நிலையில் பழனி பகுதியில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வதைக்கிறது. கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும், அடிவாரத்தில் கிரிவலம் செல்லும் பக்தர்களின் நலனுக்காக, வடக்கு கிரிவீதியில் பந்தல் அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.