பழனி அடுத்த நெய்க்காரப்பட்டி பெரியகலையமுத்தூரில் ஐகோர்ட்டு பத்திரகாளி அம்மன் கோயில் சார்பில் மாட்டுப்பொங்கலை முன்னிட்டு ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் வருகிற 16-ந் தேதி நெய்க்காரப்பட்டி பெரியகலையமுத்தூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடக்கிறது.
இதையொட்டி ஜல்லிக்கட்டு காளை மாடுகளுக்கு மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில் கால்நடை மருத்துவர் முருகன், குழுவினர், காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர். இதில் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தங்கள் காளை மாடுகளை அழைத்து வந்து பரிசோதனை செய்தனர். அவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.