பழனி: சேதமடைந்த பள்ளி கட்டிடத்தை எம். பி. ஆய்வு

70பார்த்தது
பழனி: சேதமடைந்த பள்ளி கட்டிடத்தை எம். பி. ஆய்வு
பழனியை அடுத்த பழைய ஆயக்குடியில் ஊராட்சி ஒன் றிய தொடக்கப்பள்ளி உள் ளது. இந்த பள்ளியில் கட்டிடங்கள் சேதமடைந்ததால் மேற்கூரையில் இருந்து சிமெண்ட் பூச்சுகள் அடிக்கடி பெயர்ந்து விழுந்தன. அதேபோல் சில நாட்களுக்கு முன்பு பெய்தமழைக்கு பள்ளி மேற்கூரையில் இருந்து மழைநீர் ஒழுகியது.

இதனால் பள்ளி மாண வர்கள் கடும் சிரமம் அடைந்தனர். இதனை அறிந்த எம்பி பழைய ஆயக்குடிக்கு வந்து சேதமடைந்த பள்ளி கட்டிடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் ஆயக்குடியில் கட்டிட பற்றாக்குறையில் செயல்படும் அரசு மருத்துவமனையை பார்வையிட்டார். அப்போது எம். பி. சச்சிதானந்தத்திடம் சேதமடைந்த பள்ளி, மருத்துவமனை கட்டிடங்களை இடித்து அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்ட விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் குழந்தைகளின் பெற்றோர்கள் வலியுறுத்தினார். அப்போது இதுகுறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக எம்.பி. உறுதி அளித்தார்.

தொடர்புடைய செய்தி