கீரனூர் வாகீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம்

67பார்த்தது
கீரனூர் வாகீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம்
கீரனூரில் பிரசித்தி பெற்ற வாகீஸ்வரர் கோவில் உள்ளது. பழனி முருகன் கோவிலின் உபகோவிலான இந்த கோவிலில், சுமார் 100 ஆண்டுகளுக்கு மேலாக கும்பாபிஷேகம் நடைபெறாமல் இருந்தது. இதனால் கும்பாபிஷேகம் நடத்த பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இதைக் கருத்தில் கொண்டு கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக கடந்த மாதங்களுக்கு முன்பு திருப்பணி தொடங்கியது. அனைத்து பணிகளும் நிறைவு பெற்றதை அடுத்து கும்பாபிஷேகம் நடந்தது. 

இதையொட்டி கோவிலில் மங்கள இசை, சிறப்பு யாகம், புனித நீர் கலசங்கள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து காலை 9.45 மணிக்கு புனித நீர் கலசங்கள் புறப்பாடாகி கோவில் கோபுரத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அதன்பின்னர் கோபுர கலசத்தில், புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. விழாவில் பழனி முருகன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் சுப்பிரமணியன், இணை ஆணையர் மாரிமுத்து, மாவட்ட ஊராட்சி முன்னாள் துணைத்தலைவர் பொன்ராஜ், கீரனூர் பேரூராட்சி தலைவர் கருப்புசாமி, துணைத் தலைவர் அப்துல் சுக்கூர், மரிச்சிலம்பு ஊராட்சி முன்னாள் தலைவர் சுப்பிரமணி, கீரனூர் பேரூராட்சி கவுன்சிலர்கள், அரசு அதிகாரிகள் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முடிவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி